Sunday, May 11, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுகதனவி மின்னுற்பத்தி நிலையம் வழமைக்கு

யுகதனவி மின்னுற்பத்தி நிலையம் வழமைக்கு

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்துக்கு தேவையான உலை எண்ணெய் கையிருப்பு வழங்கப்பட்டதன் பின்னர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

தேசிய மின் கட்டமைப்பில் 300 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் செயற்படுத்துவதன் மூலம் நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் பிரச்சினைகள் இருந்தபோதிலும் மின்வெட்டை நீடிக்காமல் இரண்டு மணித்தியாலங்கள் இருபது நிமிடங்களுக்கு மட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு இடமளிக்கும் என அது மேலும் தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் 27 ஆம் திகதி, இலங்கையின் எரிசக்தி ஒழுங்குமுறை நிறுவனம் இலங்கை மின்சார சபைக்கு, நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் வரை தனியார் ஆலைகளிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கியது.

மின்வெட்டை நீடிக்காமல் மின் உற்பத்தியை பேணுவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தேவையான டீசல், நாப்தா மற்றும் ஃபர்னஸ் ஒயில் ஆகியவற்றை இலங்கை மின்சார சபைக்கு வழங்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கி 3 செயலிழந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles