உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு நாளை (01) சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் (60 வயதுக்கு மேற்பட்ட) அனைவரும் மிருகக்காட்சிசாலைகளுக்கு இலவசமாக செல்ல முடியும் என விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உலகசிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினம் அக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படுகிறது.
அதற்கமைய , பாடசாலை மாணவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட பெரியவர்கள் அனைத்து உயிரியல் பூங்காக்களுக்கும் இலவசமாக சென்று வேடிக்கை பார்க்க அனுமதிக்குமாறு தேசிய விலங்கியல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து உயிரியல் பூங்காக்களுக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இலவச நுழைவு வழங்க தேசிய விலங்கியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், இந்த உயிரியல் பூங்காக்களில், சிறுவர்களுக்கு விலங்குகள் பற்றிய கல்வி அறிவை வழங்கும் வகையில் பல கல்வி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.