நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களினால் விநியோகிக்கப்படும் எரிபொருளின் தரம் குறித்து பரிசோதிப்பதற்காக, மாதிரிகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆலோசகர் சிரில் சுதுவெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில், எழுமாறாக தெரிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ்வாறு மாதிரிகளைப் பெற்று பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.