ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள தஸ்த் இ பார்ச்சி மாகாணத்தில் உள்ள ஷியா முஸ்லிம் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது .
மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.