Sunday, April 12, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரிசி விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு

அரிசி விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அறவிடப்படவுள்ள 2.5% சமூக பாதுகாப்பு வரியை விவசாய நடவடிக்கைகளில் இருந்து நீக்காவிட்டால் அன்றைய தினம் முதல் ஒரு கிலோ அரிசியின் விலையை 6.00 ரூபாவால் அதிகரிக்க நேரிடும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக விவசாய நடவடிக்கைகளில் இருந்து உரிய வரியை நீக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அதற்கான பதில் கிடைக்கவில்லை என சங்கத்தின் தலைவர் முதித பெரேரா தெரிவித்தார்.

எனவே, அரிசிக்கான உத்தரவாத விலையை 6.00 ரூபாவினால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரப்படுவதாகவும், விலை உயர்த்தப்படாவிட்டால், ஒரு கிலோ அரிசியின் கொள்வனவு விலை 3.00 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles