Sunday, May 11, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவைத்தியசாலைகளுக்கு மருந்துகளை விநியோகிக்க வேலைத்திட்டம்

வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை விநியோகிக்க வேலைத்திட்டம்

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒளடதங்களை, தொழில்சாலைகளில் இருந்து வைத்தியசாலைகளுக்கு விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நிலவும் ஒளடத கையிருப்பு தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, வைத்தியசாலைகளின் தேவைப்பாடுகளுக்கமைய ஒளடதம் மற்றும் உபகரணங்களை வைத்திய விநியோகப்பிரிவிற்கு கொண்டு செல்லாது வைத்தியசாலைகளை நோக்கி அனுப்புவதற்கும், அதன் பூரண கண்காணிப்பை வைத்திய விநியோக பிரிவு மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்மூலம் வைத்தியசாலைக்கு நேரடியாக ஒளடதங்களை விநியோகிக்க முடியும் எனவும், போக்குவரத்து செலவீனம் மற்றும் களஞ்சியசாலை நெருக்கடி நிலை என்பவற்றுக்கு தீர்வு காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles