Sunday, July 20, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநலத்திட்ட உதவிகளை பெற காத்திருப்போருக்கான அறிவிப்பு

நலத்திட்ட உதவிகளை பெற காத்திருப்போருக்கான அறிவிப்பு

நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (30) முடிவடையவிருந்த நிலையில், அது அக்டோபர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, சமுர்த்தி, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் பொது உதவிப் பயனாளர்கள், டெண்டர் ஆவணங்களில் விண்ணப்பித்தவர்கள் மற்றும் பலன்களை எதிர்பார்க்கும் அனைத்து பயனாளர்களும் விண்ணப்பிக்க முடியும்

இதற்கு விண்ணப்பிக்கும் அனைத்து நபர்களும் மாதிரி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அந்தந்த பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

எவ்வாறாயினும், தற்போது நன்மைகளைப் பெறும் எந்தவொரு தரப்பினருக்கும் அதனை இழக்கும் அபாயம் இல்லை என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles