Tuesday, September 16, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல்கள் ஆணைக்குழு பிரதமரை சந்திக்கிறது

தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமரை சந்திக்கிறது

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (29) நடைபெறுகிறது.

இதன்போது எதிர்வரும் தேர்தல் மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

மாகாணசபை தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக நியமிக்கப்பட்ட தெரிவுக் குழுவின் தலைவராக பிரதமர் தினேஷ் குணவர்தனவே செயல்பட்டு வந்தார்.

இந்தநிலையில் பிரதமர் தினேஷ் குணேவதன விடுத்த அழைப்பின் அடிப்படையிலேயே இன்றைய சந்திப்பும் இடம்பெறுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles