அக்குரஸ்ஸ – ஹுலந்தாவ – விக்கசிதகம பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் முதலையால் ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நில்வலா ஆற்றில் நேற்று மீன்பிடிக்கச் சென்ற போதே அவர் இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் கடந்த சில நாட்களாக நில்வலா ஆற்றில் உள்ள குறித்த இடத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், முதலை இவரின் நடத்தையை அவதானித்து அவரை இரையாக்கி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் 35 வயதுடைய இளைஞர் ஒருவரே காணாமல் போயுள்ளதுடன், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் அவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், குறித்த இளைஞர் முதலையால் ஆற்றுக்குள் இழுத்துச் செல்லும் காட்சி அடங்கிய காணொளி பின்வருமாறு: