Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு IMF இன் உதவி கிடைப்பதில் சிக்கல்

இலங்கைக்கு IMF இன் உதவி கிடைப்பதில் சிக்கல்

இந்த ஆண்டின் இறுதியில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் டொலர்களை வழங்கும் என அரசாங்கம் நம்பியுள்ளது.

ஆனால் அவ்வாறு நடப்பது நிச்சயமில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் நிக்கி ஊடகத்துக்கு மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள்ள IMF இன் இலங்கைக்கான தூதுக்குழுவின் சிரேஷ்ட பிரதானி பீற்றர் ப்ரூவர் மற்றும் பிரதானி மசாஹிரோ நொசாகி ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

கடன் மறுசீரமைப்பு இடம்பெற்று வருகிறது.அது இலகுவானது அல்ல. சகலத் தரப்பினரும் இணங்கக்கூடிய காலகட்டத்தை உறுதியாக கூறமுடியாது. சம்மந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் துரிதமாக இந்த விடயத்தில் செயற்பட வேண்டும். அவ்வாறு செய்தால் இலங்கைக்கு துரிதமான மீட்சி கிடைக்கும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles