இலங்கையில் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிதி உதவி வழங்க இந்த உதவி பயன்படுத்தப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.