Sunday, July 20, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீட்டிலிருந்து உணவு கொண்டு செல்லும் எம்பிகள்!

வீட்டிலிருந்து உணவு கொண்டு செல்லும் எம்பிகள்!

நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் நாடாளுமன்ற உணவகத்தில் தற்பொழுது சாப்பிடுவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

எனினும் நாடாளுமன்ற உணவகத்தில் உணவை உட்கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சரியாக தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பகல் உணவு 100 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளர்களின் பகல் உணவு 50 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேசமயம் நாடாளுமன்றின் உணவகத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளமை தொடர்பான செய்தியை பத்திரிகை வாயிலாகவே அறிந்து கொண்டேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக, அநேகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீட்டிலிருந்தே உணவு கொண்டு வரத் தொடங்கியுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles