Sunday, May 11, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாண் விலை 500 ரூபா வரை அதிகரிக்கலாம்

பாண் விலை 500 ரூபா வரை அதிகரிக்கலாம்

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

வற் வரி அதிகரிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி செலுத்த வேண்டியதன் காரணமாக பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எட்டு சதவீதமாக இருந்த வற் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக இரண்டரை சதவீத சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோதுமை மா மூடை ஒன்றின் குறைந்தபட்ச விலை 21இ000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும், கோதுமை மா தட்டுப்பாட்டினால் நாட்டில் உள்ள பல பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்தையில் ஒரு இறாத்தல் பாணின் விலை 190 ரூபாவாகும். அதேவேளை ஒரு சான்விச் பாண் 250 முதல் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாண் விற்பனை சுமார் ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி பாண் இறாத்தல் ஒன்று 500 ரூபா வரை அதிகரிக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles