பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் மாணவர்களுக்கு போசணை இல்லாத உணவுப் பொருட்களை வழங்குவதாகக் கூறப்படுவதால், அரசாங்கப் பாடசாலைகளில் உணவகங்களை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து முன்னெடுக்கவுள்ளன.
அக்டோபர் 1ஆம் திகதி முதல் சுமார் 1,267 பொது சுகாதார பரிசோதகர்களும், 2,800 குடும்ப நல செவிலியர்களும் பாடசாலைகளுக்கு சென்று சிற்றுண்டிச்சாலைகளை ஆய்வு செய்து பாடசாலை நேரத்தில் மாணவர்களுக்கு சத்தான உணவுப் பொருட்களை வழங்குவதை உறுதிசெய்ய நியமிக்கப்பட்டுள்ளனர்.