Tuesday, September 16, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகஜீமாவத்தை தீ விபத்தில் 80 வீடுகளுக்கு சேதம்

கஜீமாவத்தை தீ விபத்தில் 80 வீடுகளுக்கு சேதம்

கிராண்ட்பாஸ் – கஜிமாவத்தை பகுதியில் குடியிருப்பு தொகுதியொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 தற்காலிக குடிசை வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு 8 மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர தீயணைப்பு திணைக்களம் மற்றும் கடற்படையின் 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்தினால்இ உயிர்ச்சேதமோ எவருக்கும் காயமோ ஏற்படவில்லை என்பதுடன் 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதேவேளை, கஜீமா வத்தை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பணிப்புரைகளை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles