Sunday, May 11, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்திய இராஜாங்க அமைச்சரின் மகன்

இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்திய இராஜாங்க அமைச்சரின் மகன்

கிரிபத்கொடையில் உள்ள பிரபல பயிற்சி வகுப்புக்கு வந்த மாணவன் மீது நேற்றுமுன்தினம் (26) இரவு 7.30 மணியளவில், கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்த்திருக்க டிஃபெண்டர் வாகனங்களில் வந்து தன்னை அமைச்சரின் மகன் என கூறிக்கொண்ட இளைஞன் உள்ளிட்ட குழுவினர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சுமார் 20 பேர் கொண்ட கும்பல் குறித்த மாணவனை இரத்தம் வரும் வரை தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்களைத் தவிர, கருப்பு உடை அணிந்த உயரடுக்கு பாதுகாவலர்கள் குழு டிஃபெண்டர் வாகனங்களில் வந்து அருகில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரின் மகன் என கூறிக்கொண்ட இளைஞனின் காதலிக்கு தாக்கப்பட்ட மாணவன் காதல் கடிதம் கொடுத்துள்ளதாகவும் இதன் காரணமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

களனியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் மகன் சம்பவத்தின் போது இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன பேட்டியளித்துள்ளார்.

#Aruna

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles