Sunday, May 11, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆகஸ்ட் மாதத்தில் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் ஐந்து வயதுக்கும் குறைந்த பிள்ளைகளில் 60.9 சதவீதம் குறை நிறையுடைய சிறுவர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த போசனை விசேட வைத்திய நிபுணர் கௌசல்யா கஸ்தூரி ஆரச்சி, நாடு முழுவதும் சுகாதார வைத்திய காரியாலயத்தினால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதணைகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன், கர்ப்பிணி தாய்மார்களின் உடல் நிறை சுட்டெண்ணுக்கு அமைய, இந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதம் வரை 15 சதவீதமும், 18 சதவீதத்துக்கும் குறைவான தாய்மார்களில் 10 இல் இருவரும் நிர்ணயிக்கப்பட்ட எடையை பூர்த்தி செய்யாத தாய்மார்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஐந்து வயதுக்கு குறைந்த சிறுவர்களின் போசனை தொடர்பான நிறை அளவீட்டில் 60.9 சதவீதமான ஈடுபட்டிருந்தனர்.

அந்த புள்ளி விபரங்களுக்கு அமைய கடந்த மாதத்தில் 14.6 சதவீதமான பிள்ளைகள் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட ரீதியாக எடுத்துக்கொண்டால், கடந்த மாதத்தில் அதிகமானோர் நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அது 21.9 சதவீமாக பதிவாகியுள்ளது.

அதற்கு அடுத்ததாக வவுனியா மாவட்டத்தில் 19.9 சதவீதமான ஐந்து வயதுக்கும் குறைந்த, குறை நிறையுடை சிறுவர்கள் பதிவாகியுள்ளனர்.

இதனையடுத்து அம்பாறை மாவட்டத்தில் 18.5 சதவீதமாகவும் குறை நிறையுடைய சிறுவர்கள் உள்ளதாக போசாக்கு விசேட வைத்தியர் கௌசல்யா கஸ்தூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles