Tuesday, November 19, 2024
26.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் பிரசார செலவுகளை கட்டுப்படுத்த புதிய சட்டமூலம்

தேர்தல் பிரசார செலவுகளை கட்டுப்படுத்த புதிய சட்டமூலம்

தேர்தல் பிரசார செலவுகளை திருத்துவதற்கான சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அது தொடர்பான சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜீ. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் மக்கள் வாக்குகளைப் பெறுவதற்காக செலவிடும் அதிகப்படியான செலவுகளைக் கட்டுப்படுத்துவதே இந்தப் புதிய சட்டத்தின் நோக்கமாகும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் சட்ட வரைவுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபரின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாகவும் இந்த சட்டமூலத்தை சீர்திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட தேர்தல் சட்டங்கள் குறித்த நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவும் பரிந்துரைத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles