Sunday, July 20, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள ஆதிவாசிகள்

உணவு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள ஆதிவாசிகள்

பிபில ரதுகல கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் இன்று கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அதன் தலைவர் சுதா வன்னிலஎத்தோ தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி மோசமடைந்துள்ள நிலையில் தனது மக்கள் இந்த நிலையை அடைந்துள்ளதாக அவர் கூறினார்.

இக்கிராமத்தில் சுமார் 110 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும்இ இளைஞர்கள் எவருக்கும் வேலை இல்லை எனவும், கூலி வேலை கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் ஒரு வேளை உணவைக் கூட தேட முடியாத நிலை உள்ளது என்றும் அவர் கூறினார்.

தற்போதைய உணவுப் பற்றாக்குறையால் சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சில குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உரம் மற்றும் நிலப்பிரச்சினை ஆதிவாசி மக்கள் விவசாயம் செய்வதை கடுமையாக பாதித்துள்ளதால் விவசாய நிலங்கள் அனைத்தும் வறண்டு வருவதாகவும் பழங்குடியினத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles