மசகு எண்ணெய்யின் தரம் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவருக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சட்டப்பூர்வமாக பதிலளிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தரம் குறைந்த மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளதாகவும், இந்த இருப்பை உற்பத்திக்கு பயன்படுத்த முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தரமற்ற மசகு எண்ணெய் இறக்குமதியினாலேயே மின்வெட்டு நேரம் அதிகரித்ததாக PUCSL தலைவர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.