Sunday, May 11, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமொட்டு கட்சி எம்.பி இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மொட்டு கட்சி எம்.பி இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அரச சொத்துக்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி செயலகம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.பி.எஸ் குமாரசிறி மற்றும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவெல ஆகியோருக்கு எதிராகவே சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பயன்படுத்திய Toyota Land Cruiser வாகனமும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பயன்படுத்திய  Toyota Hilux வாகனமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய அரச வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இருவரும் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தமையினால், வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி செயலகம் அவதானம் செலுத்தி வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles