பிறந்து ஏழு நாட்களே ஆன சிசுவை 50,000 ரூபாவுக்கு வாங்கிய பெண் ஒருவரும் இடைத்தரகராக செயற்பட்ட ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
கெபிதிகொல்லேவ வஹல்கட பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரும், இடைத்தரகராக செயற்பட்ட அனுராதபுரத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவருமே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிசுவின் தந்தையினாலேயே அதனை விற்பனை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், தற்போது அவர் அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிசுவின் தாயார் (21) செய்த முறைப்பாட்டுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், சிசுவை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சிசுவின் பெற்றோர் சட்டரீதியாக திருமாணமானவர்கள் அல்ல என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
#Lankadeepa