Monday, February 16, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்பாகிஸ்தானில் உலங்கு வானூர்தி விபத்து - அறுவர் பலி

பாகிஸ்தானில் உலங்கு வானூர்தி விபத்து – அறுவர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 06 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இராணுவ உயர்நிலை அதிகாரிகள் இருவர், விமானிகள் இருவர் உள்ளிட்ட அறுவரே உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு, இந்த மாதத்தில் ஏற்பட்ட இரண்டாவது உலங்கு வானூர்தி விபத்து இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெள்ளநிவாரணப்பணிகளுக்காக சென்ற உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் அறுவர் உயிரிழந்தனர்.

இதற்கமைய இந்த மாதத்தில் மாத்திரம் பாகிஸ்தானில் உலங்கு வானூர்தி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles