Friday, May 9, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெல் கொள்வனவுக்கு கடன் வழங்க வங்கி தலைவர்களே தீர்மானிக்க வேண்டுமாம்

நெல் கொள்வனவுக்கு கடன் வழங்க வங்கி தலைவர்களே தீர்மானிக்க வேண்டுமாம்

சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு கடன் வழங்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் இரண்டு அரச வங்கிகளின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபைகளின் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நெல் கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வழங்கும் நடவடிக்கை வர்த்தகப் பணி என்பதால் மத்திய வங்கி இந்த தீர்மானத்தில் தலையிடாது என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் நெல்லை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வங்கிக்கடன் வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு உரிய ஸ்தாபனங்களின் தலைவர்களும் கொள்கை வகுப்பாளர்களும் ஒன்றிணைந்து தீர்வை வழங்க வேண்டும்.

நெல் கொள்வனவு செய்ய அரச வங்கிகள் வழங்கிய கடன்கள் திட்டமிட்டபடி திருப்பிச் செலுத்தப்படவில்லை.

இதன்படி, வங்கி முறையின் ஊடாக தொடர்ச்சியாக கடன்களை வழங்குவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles