இரண்டு வேளை உணவை தவிர்ப்பது உடலுக்கு நன்மையானது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் ஊடக செயலாளர் வைத்தியர் நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது கர்ப்பிணித் தாய்மார்களும் கூட அதிக போஷாக்கால் பீடிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அல்லது வேறு எவரையும் தனது மருத்துவப் பணியில் பார்த்ததில்லை எனவும், அப்படிப்பட்ட குழந்தைகளை தான் படங்கள் மூலமாகவே பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் ஒரு போசாக்கு குறைபாடுள்ள குழந்தை இருந்தால் அதற்கு அரசாங்கம் பொறுப்பு அல்ல. கிராமிய மட்டத்தில் இருந்து சுகாதார திணைக்களமே பொறுப்பேற்க வேண்டும்.
அண்மையில் பாடசாலை ஒன்றில் மாணவியொருவர் மதிய உணவிற்கு இளம் தேங்காயை உட்கொண்ட சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வைத்தியர்இ தேங்காய் உடலுக்குத் தேவையில்லாத ஒன்றல்ல. அது மிகவும் சத்தான உணவு என தெரிவித்தார்.
முடிந்தால் தேங்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றும் இரண்டு வேளை உணவைத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.