Friday, May 9, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாமரை கோபுரத்தின் கடனை அடைக்க நாளாந்தம் $41,000 ஈட்ட வேண்டும்

தாமரை கோபுரத்தின் கடனை அடைக்க நாளாந்தம் $41,000 ஈட்ட வேண்டும்

தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனைத் தீர்க்க வேண்டுமாயின், நாளாந்தம் அதன் மூலம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தாமரை கோபுரத்திற்காக மொத்தம் 105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தாமரை கோபுரம் கட்டப்பட்ட நிலத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு வழங்குவதற்காக 4.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. அவர்களின் நிலுவை தொகையை தீர்த்துவைக்க மேலும் 56 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வேண்டும். இதற்கு ஐந்தாண்டுகளில் தீர்வு காண வேண்டும்.

எனவே தாமரை கோபுரம் சித்தரிப்பது ஒரு இருண்ட படம் மாத்திரமே என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles