Tuesday, September 16, 2025
25.6 C
Colombo
செய்திகள்உலகம்ஜெக்குலின் பெர்னாண்டஸுக்கு பிணை

ஜெக்குலின் பெர்னாண்டஸுக்கு பிணை

200 கோடி ரூபா இந்திய ரூபா பணத்தை அச்சுறுத்தி பறித்த வழக்கில் நடிகை ஜெக்குலின் பெர்னாண்டஸுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அமலாக்க இயக்குனரகம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் 200 கோடி ரூபா பணத்தை மோசடியாக பெற்ற குற்றச்சாட்டில் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சட்ட அமுலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பொலிவூட் நடிகை ஜெக்குலின் பெர்னாண்டஸ் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜாக்குலின் மீதான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அதன்போது, முன் பிணை கோரி அவரது சட்டத்தரணிகள் குழு மனு தாக்கல் செய்தது. மனுவை பரிசீலித்த நீதிமன்றம், ஜாக்குலினுக்கு இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டது.

இந்த வழக்கு எதிர்வரும் அக்டோபர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles