ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் பிரதிவாதிகள் பட்டியலில் இருந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை நீக்குவதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமையின் அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதில்லை என உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டின் முக்கிய தேவாலயங்கள் மற்றும் உயர்தர விருந்தினர் விடுதிகளை இலக்குவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதில் 250 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமராக பதவி வகித்து வந்திருந்தார்.