நீண்டகால சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விஞ்ஞான நிலையத்துடன் கூடிய எட்டு பேருந்துகளை இலங்கைக்கு வழங்க சீனா ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நன்கொடையின் பெறுமதி 660 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது.
இலங்கையில் சிறுநீரக நோய் அதிகரித்துள்ள 8 மாவட்டங்களுக்கு இந்தப் பேருந்துகள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி, அனுராதபுரம், பொலனறுவை, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, குருநாகல், மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த பேருந்துகள் வழங்கப்படவுள்ளன.