Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரவிலும் திறக்கப்படும் பின்னவலை மிருகக்காட்சிசாலை

இரவிலும் திறக்கப்படும் பின்னவலை மிருகக்காட்சிசாலை

பின்னவலை மிருக்காட்சிசாலைக்கு இரவு சஃபாரி பூங்கா என பெயரிட தீர்மானித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பின்னவல மிருககாட்சி சாலையை பார்வையிடுவதற்கு மாலை 5 மணி வரை மாத்திரமே அனுமதி வழங்கப்படுகின்றது.

இதனால் சுற்றுலா பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதோடு, வருமானமும் குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மிருகக் காட்சி சாலையை இரவு நேரமும் பார்வையிட காணப்படுகின்ற தடைகள் தொடர்பில் ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்ய அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் இரவு நேரத்திலும் மிருகக்காட்சி சாலையை சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறக்கும் பட்சத்தில் இரவு சஃபாரி பூங்கா என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles