சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) உத்தேச கடன் வசதிகள் தொடர்பில் அதன் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக, இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்கா செல்லவுள்ளது.
அடுத்த மாதம் 6ஆம் திகதி வொஷிங்டன் செல்லவுள்ள அவர்கள், அங்கு மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அரசாங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.