Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுCPC எரிபொருள் நிலையங்களில் ஒரு பகுதி தனியாருக்கு

CPC எரிபொருள் நிலையங்களில் ஒரு பகுதி தனியாருக்கு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 1250 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அதன்படி, அந்த நிறுவனங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும், எரிபொருளை விநியோகிப்பதற்கும், எரிபொருளை விற்பனை செய்வதற்கும் அதிகாரம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

டெண்டர்களை சமர்ப்பித்துள்ள 24 நிறுவனங்களில் சில நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles