Sunday, May 11, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டு92 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

92 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

அத்தியாவசிய 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றில் ஒப்புக்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீரசிங்கவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனினும், 14 அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த 14 முக்கிய மருந்துகள் மருத்துவ வழங்கல் பிரிவில் கையிருப்பில் இல்லை என்றும்இ அவை சுற்றளவில் கிடைக்கின்றன என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீரசிங்கவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு கட்டுப்பாட்டை மீறவில்லை என்றும்இ அத்தகைய மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மருந்துப் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க முடியும்.

மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு மருந்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles