ரயில்வே திணைக்களத்தின் தண்டவாளங்கள் உள்ளிட்ட பழைய உலோகங்களை சர்வதேச கேள்விப்பத்திரம் ஊடாக முதன்முறையாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதனிடையே பற்றாக்குறையைப் போக்க 10இ000 தண்டவாளங்களை இறக்குமதி செய்ய உள்ளோம்.
தற்போது ரயில்கள் தண்டவாளத்தில் புரள்கின்றன. ரயில்வேயில் பழைய தடங்கள் உள்ளன. முன்னாள் செயலாளர் தண்டவாள டெண்டரை இரத்து செய்தார். பாதைகள் இல்லாததற்கு அதுவும் ஒரு காரணம்.
உதிரிப் பாகங்கள் மற்றும் எண்ணெய் பிரச்சினைகள் இருந்தபோதிலும் திணைக்களத்தின் பணியைப் பராமரித்த ஊழியர்களுக்கு நன்றி என அவர் மேலும் தெரிவித்தார்.