Tuesday, July 22, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநியூஸிலாந்து விசா விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்

நியூஸிலாந்து விசா விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்

கொழும்பில் உள்ள நியூசிஸிலாந்து உயர்ஸ்தானிகராலயம் இலங்கையர்களுக்கான விசா நடைமுறை தொடர்பான கடவுச்சீட்டுத் தேவைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.

விசா நடைமுறையின்போது பெரும்பாலான விண்ணப்பதாரர்கள், அசல் கடவுச்சீட்டை குடிவரவு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த நிபந்தனை, தற்காலிகமாக நியூசிஸிலாந்து  குடிவரவு திணைக்களம் நீக்கியுள்ளதாக நியூசிஸிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் ஆப்பிள்டன் தெரிவித்தார்.

அதற்கு பதிலாக விண்ணப்பதாரர்கள் தங்கள் கடவுச்சீட்டின் ஸ்கேன் செய்யப்பட்ட உயர் தர (High Quality) பிரதியை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

நியூசிஸிலாந்திற்குள் நுழைவதற்காக தற்காலிக விசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தும் என உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles