ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சருமான டயானா கமகே, கஞ்சா வளர்ப்பு தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், கஞ்சாவுக்கு இலங்கையில் தொடர்ந்தும் தடை நீடிக்காது எனவும் கஞ்சாவை ஏற்றுமதி செய்யும் வகையில் பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலமாக அதிக டொலர்களை ஈட்டிக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, கஞ்சாவை நாடாளுமன்ற வளாகத்தில் பயிரிடுமாறு தெரிவித்தார்.
கஞ்சா வளர்ப்பில் கிடைக்கின்ற பணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கஞ்சாவின் ஏற்றுமதி ஊடாக வளர்ச்சி அடைந்த நாடு என்று எதுவும் கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.