Friday, July 25, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிறமையான அரச ஊழியர்கள் 60 வயதுக்கு மேல் பணியாற்றலாம் – பந்துல குணவர்தன

திறமையான அரச ஊழியர்கள் 60 வயதுக்கு மேல் பணியாற்றலாம் – பந்துல குணவர்தன

என்ஜின் சாரதிகள் போன்ற விசேட திறன்மிக்க ஊழியர்களின் சேவையை 60 வருட கால எல்லையில் ஓய்வு பெற்ற பின்னரும் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இந்த விடயம் தொடர்பில் கவலை தெரிவித்த போதே குணவர்தன இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் அண்மையில் கொண்டு வந்த அரச ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதெல்லை காரணமாக விரைவில் ஓய்வுபெற வேண்டிய பல ரயில் சாரதிகள் இருப்பதாகவும், இதே காலப்பகுதியில் கணிசமான எண்ணிக்கையிலான சாரதிகள் ஓய்வுபெறும் பட்சத்தில் ரயில் சேவை பாதிக்கப்படும் எனவும் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

போதிய தீர்வு கிடைக்காவிட்டால் சேவைக்கு இடையூறு ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், இவ்வாறானதொரு சூழ்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் அத்தகைய ஊழியர்களின் சேவையை அரசாங்கம் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles