Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிரிபோஷ சர்ச்சை: 4 நிறுவனங்களின் பணிப்பாளர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

திரிபோஷ சர்ச்சை: 4 நிறுவனங்களின் பணிப்பாளர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

சந்தையில் காணப்படும் திரிபோஷ பொருட்களில் அஃப்லாடொக்சின் கலந்துள்ளதாகத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளை கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க நேற்று (21) பரிசீலித்தார்.

இதன்போது குறித்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் 4 பிரதான நிறுவனங்களின் பணிப்பாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

கொத்தடுவ பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகம், பொது சுகாதார பரிசோதகர் பி. ஏ. சஜித கசுனால் தாக்கல் செய்யப்பட்ட 04 வழக்குகளைப் பரிசீலித்த நீதவான், சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்யும் நிறுவனங்களின் பணிப்பாளர்களை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணையும் பிறப்பித்துள்ளார்.

1993ஆம் ஆண்டின் 787 ஆம் இலக்க பல்வேறு கட்டளைகளின் கீழ், உணவுப் பொருள் அதிக அளவு அஃப்லாடொக்சின் அடங்கிய திரிபோஷ மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகித்தது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகம் இது தொடர்பான வழக்குகளை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஒப்படைத்திருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles