Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிராக வழக்கு

டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிராக வழக்கு

அமெரிக்கவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பிள்ளைகள் மூவருக்கு எதிராக ஊழல் மோசடி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர்களது குடும்ப நிறுவனமான ‘ட்ரம்ப் அமைப்பு’ மீதான விசாரணைகளுக்கு பின்னரே அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடன் பெறுவதற்கும் குறைந்த வரி வருமானத்தை செலுத்துவதற்கும் தமது வியாபாரத்தின் மதிப்பு குறித்து அவர்கள் பொய்யுரைத்தாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

2011 முதல் 2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ட்ரம்ப் அமைப்பு, ஏராளமான மோசடி செயல்களை ஈடுபட்டுள்ளதாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டை ட்ரம்ப் முழுமையாக நிராகரித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பிள்ளைகளான டொனால்ட் ஜூனியர், இவன்கா மற்றும் எரிக் ட்ரம்ப் மற்றும் ட்ரம்ப் அமைப்பின் 2 நிர்வாகிகளான ஆலன் வெய்சல்பெர்க், ஜெஃப்ரி மெக்கனி ஆகியோரும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles