கொத்மலை – வேவண்டன் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஆணொருவர் பலியானார்.
நேற்றைய தினம் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 ஆண்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்.
இதன்போது, குறித்த இருவரும் கம்பளை போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டனர்.
அதில் ஒருவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பலியானவர் 60 வயது மதிக்கத்தக்க கொத்மலை வௌண்டன் பிரிவைச் சேர்ந்தவராவார்.
இதன்போது, காயமடைந்த 23 வயதுடையவர் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.