அநுராதபுரம் மாவட்டத்தின் விளச்சிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட 3 பாடசாலைகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், உணவு இன்மையினால் நேற்று மயக்கமடைந்து விழுந்துள்ளதாக இன்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டது.
அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ் குமாரசிறி இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், குறித்த பிரதேச செயலகத்தின் சித்தார்த்த மகா வித்தியாலயம், கிம்புலாவ காமினி வித்தியாலயம் மற்றும் ஆனந்த வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பாடசாலை அதிபர்களை தொடர்புகொண்டு வினவியதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், கம்பஹா – மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தேங்காய் துண்டுகளை பகலுணவாக கொண்டுவந்ததாக கூறப்படும் விடயத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும், 60 ரூபாவுக்கு பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு வழங்க முடியாது. எனவே உடனடியாக இது தொடர்பில் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரினார்.