Monday, July 28, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல ரயில் பயணங்கள் ரத்தாகும் அபாயம்

பல ரயில் பயணங்கள் ரத்தாகும் அபாயம்

தற்போதுள்ள ஊழியர் வெற்றிடங்கள் காரணமாக எதிர்காலத்தில் பல ரயில் பயணங்களை ரத்துச் செய்ய நேரிடும் என ப ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

60 வயதில் கட்டாய ஓய்வு பெறுவதால், ரயில்வே திணைக்களத்தில் ஏராளமானோர் ஓய்வு பெறவுள்ளனர்.

அதனடிப்படையில் சுமார் 50 வீதமானோர் ஓய்வு பெறப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வெற்றிடங்கள் இரட்டிப்பாகும் போது பெரும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இன்று ஒரு கட்டுப்பாட்டாளர் பணியமர்த்தப்பட்டால், அவர் தலைமை கட்டுப்பாட்டாளராக பணியாற்ற 7 ஆண்டுகள் ஆகும்.

மேலும், ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் சாரதிகள் மற்றும் இளநிலை பணியாளர்கள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.

வருங்காலத்தில் ரயில் சேவையை பராமரிக்க வேண்டும் என்றால் இது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles