நீரிழிவு நோயை கட்டுப்படுத்த அல்லது இரத்தத்தில் சீனியின் அளவைக் கட்டுப்படுத்த இலங்கையில் மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ருஹூனு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு ஒன்றினால் கோவக்காய் இலைகளின் இரசாயனப் பதார்த்தங்களில் இருந்து இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து 100க்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளர்களுக்கு வழங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வெற்றிகிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து வில்லைகளாக தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான காப்புரிமையும் பெறப்பட்டிருப்பதாக குறித்த ஆராச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் கோவக்காய் இலையை வெறுமனே உண்பதால் இந்த பலன்கிடைக்காது என்றும் அவ்வாறு உண்ண வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.