ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் நலம் விசாரிப்பதற்காக அங்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அவர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளதாகவும், அங்கு அந்நாட்டு அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


