குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறித்து தமது வருத்தத்தை தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
‘நான் யுனிசெஃப் அதிகாரிகளை அமைச்சகத்திற்கு அழைத்து, ஏன் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டீர்கள் என வினவினேன். அதற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். அவர்கள் 2016 அறிக்கையை வெளியிட்டுள்ளனர்’ என அமைச்சர் பதிலளித்தார்.