மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஏரோஃப்ளோட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏவியேஷன் சோர்ஸ் இணையத்தளம் இதனை தெரிவித்துள்ளது.
ஏரோஃப்ளோட் விமானங்கள் மீண்டும் தடுத்து வைக்கப்படாது அல்லது கைது செய்யப்பட மாட்டாது என்ற இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதியின் பேரில் ஒக்டோபர் மாதம் முதல் விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் ரஷ்ய பிரஜைகள் ஆண்டுக்கு 50 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டு, இலங்கைக்கான விமானங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டன.மூன்று நாட்களுக்குப் பிறகு, விமானத்தின் மீதான தடை நீக்கப்பட்டு, விமானம் மாஸ்கோவுக்கு புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.