மீனவர்களுக்காக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய், இந்திய மீனவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக எரிசக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் முதல் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அதிகளவான மண்ணெண்ணெய் மீனவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், கடலில் இந்திய மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபடுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி வரை இலங்கையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 87 ரூபாவாக இருந்த போது, இந்தியாவில் மண்ணெண்ணெய் விலை பல மடங்கு அதிகரித்திருந்ததாக தெரவிக்கப்படுகிறது.