Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவிடமிருந்து அரிசிக்காக காத்திருக்கும் கப்பல்கள்

இந்தியாவிடமிருந்து அரிசிக்காக காத்திருக்கும் கப்பல்கள்

ஆறு இலட்சம் டொன் அரிசியினை ஏற்றுவதற்காக இந்தியாவின் பல்வேறு துறைமுகங்களில் 20 கப்பல்கள் காத்திருப்பதாக துறைசார் அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் சுமார் 15 நாட்களுக்கு சரக்குகளை தேங்க வைத்துள்ளதால், விற்பனையாளர்கள் தாமதக் கட்டணங்களை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, கடந்த 8 ஆம் திகதி குருணை அரிசியை ஏற்றுமதி செய்வதைத் தடைசெய்ததுடன், பல்வேறு வகையான ஏற்றுமதிகளுக்கு 20 சதவீத வரி விதித்தது.

இதன் காரணமாக, 6 இலட்சம் டொன் அரிசிக்கு மேலதிகமாக, 4 இலட்சம் டொன் அரிசி துறைமுகக் கிடங்குகள் மற்றும் கொள்கலன் சரக்கு நிலையங்களில் சிக்கியிருப்பதாக அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.வி.கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

துறைமுகங்களில் தேங்கியுள்ள குருணை அரிசி ஏற்றுமதிகள் சீனா, செனகல் முதலான நாடுகளுக்கும், ஏனைய வகை வெள்ளை அரிசிகள் இலங்கை, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகளின் கொள்வனவாளர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles