மின் கட்டண அதிகரிப்பு நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட தீர்மானம் என்பதால் பொறுமை காக்குமாறு பிக்குமார்களிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கோரியுள்ளார்.
நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், மத ஸ்தலங்களுக்கு மின் கட்டண மானியம் வழங்குவதில் சிக்கல் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனால், பண்டைய காலத்தை போன்று அரச மரத்தை சுற்றி விளக்குகளை ஏற்றி மத வழிபாடுகளில் ஈடுபடுமாறு அவர் கோரியுள்ளார்.