Thursday, May 8, 2025
28.5 C
Colombo
செய்திகள்உலகம்ராணியின் கிரீடத்தில் பொறுத்தப்பட்டிருந்த வைரத்தை மீள கோரும் தென்னாபிரிக்கா

ராணியின் கிரீடத்தில் பொறுத்தப்பட்டிருந்த வைரத்தை மீள கோரும் தென்னாபிரிக்கா

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகள் முடிவடைந்த நிலையில், ராணியின் கிரீடத்தில் பொருத்தப்பட்டிருந்த வைரத்தை தென்னாபிரிக்காவிற்கு திருப்பித் தருமாறு பிரித்தானிய அரச குடும்பத்திடம் அந்நாட்டின் தேசபக்தி அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

‘கிரேட் ஸ்டார் ஒஃப் ஆப்ரிக்கா’ அல்லது ‘குல்லினன் 1’ என்று அழைக்கப்படும் இந்த வைரமானது தென்னாபிரிக்காவில் 1905ல் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தென்னாபிரிக்காவில் கிடைத்த மிகப்பெரிய வைரம் மட்டுமல்ல, மிகவும் மதிப்புமிக்க வைரமும் ஆகும்.

அந்நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த வைரத்தை பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு நன்கொடையாக வழங்கினர். அதன்படி கிரீடத்தில் வைரம் இணைக்கப்பட்டது.

எனினும், தென்னாபிரிக்காவில் இருந்து வெள்ளை ஆட்சியாளர்கள் வைரங்களை கொள்ளையடித்ததாக தேசபக்தி ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

#Reuters

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles